National Level 2nd Place in steeplechase

"வாழ்த்துகளும், பாராட்டுக்களும்."

வருடா வருடம் இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு தேசிய ரீதியில் சிரேஷ்ட, கனிஷ்ட என்ற பிரிவுகளில் இலங்கை பூராகவும் உள்ள பாடசாலைகளில் தனி நபர் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஆர்வம் உள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அவ்வாறு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் ஊடாக 07.06.2022 அன்று தேசிய ரீதியில் கொழும்பு, சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற கனிஷ்ட போட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான 20 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவு 3000 மீற்றர் நீர்த்தடை தாண்டலுடனான ஒட்டத்தில் பங்குபற்றி இரண்டாம் இடம் பெற்று வெற்றியீட்டி எமது கல்வி வலயத்திற்குப் பெருமை சேர்த்த தி/தி/ சல்லி அம்பாள் மகா வித்தியாலயத்தில் கற்கும் செல்வி. அருட்செல்வன் பிரதிஷா என்ற மாணவிக்கு எமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

  1. பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்: திரு. வரதராசன் சந்துரு
  2. மாணவி கற்கும் தரம்:13 கலைப்பிரிவு (2022)
  3. மாணவியின் பிறப்பு: 05.04. 2003
  4. மாணவியின் (தரம் 01-13 வரை): தி/தி/ சல்லி அம்பாள் மகா வித்தியாலயம்
  5. மாணவி க.பொ.த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறு: 5A, 2B, 2C (2019)
  6. மாணவியிடம் காணப்படும் பொதுத் திறமைகள்:சிறந்த தலைமைத்துவப் பண்பு
  7. மாணவியிடம் காணப்படும் ஏனைய தனித்திறமை:
    1. Korfball-2021 (Coach level1&Referee level1)
    2. Science Research competition-2017 & 2018 (Step1 winner)
  8. மாணவியின் எதிர்கால இலட்சியம்: வழக்கறிஞர்
  9. மாணவியின் அப்பா: நடராசமணி அருட்செல்வன்
  10. மாணவியின் அப்பாவின் தொழில்: கடற்றொழில்
  11. மாணவியின் அம்மா: அருட்செல்வன் பத்மரதி
  12. மாணவியின் உடன் பிறப்புக்கள்:
    1. சகோதரி - அருட்செல்வன் பிரியங்கா
    2. சகோதரன் - அருட்செல்வன் ஶ்ரீபிரியன்
  13. மாணவியின் விலாசம்: 01ஆம் வட்டாரம், சல்லி, சாம்பல்தீவு
இவரைப் போன்று குறித்த போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய ஏனைய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் பதிவு செய்வதுடன் மட்டுமல்லாது எமது கல்வி வலயமானது கற்றல், கற்பித்தலுடன் மாத்திரம் நின்று விடாது கல்வி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தனித்திறமையுள்ள மாணவச் செல்வங்களை இனம், மதம் மற்றும் மொழி கடந்து இனங்கண்டு அவ்வாறானவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்த பாடசாலை மட்டத்தில் தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நிச்சயம் அவர்களது தேவைகளை உணர்ந்து அவைகளை நிறைவு செய்வதனூடாக மென்மேலும் மாணவச் செல்வங்கள் தத்தமது திறமைகளை விடா முயற்சியினூடாக வெளிப்படுத்தி சிறந்த எதிர்காலத்தினை அமைத்துக்கொள்ள வேண்டுமென இறைவனை வேண்டுகின்றேன்.

வலயக்கல்விப் பணிமனை சார்பாக...

திரு. சிவானந்தம் சிறீதரன் (SLEAS-1),
வலயக்கல்விப் பணிப்பாளர்,
திருகோணமலைக் கல்வி வலயம்.

Print   Email