A Progress Review Presentation on Education Development

  

"பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் பற்றிய முன்னேற்ற மீளாய்வு முன்னளிக்கை-2022"
இவ் வருடம் (2022) தை மாதம் முதல் வைகாசி மாதம் வரையும் எமது கல்வி வலயத்தின் கீழுள்ள (82) தமிழ், சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி சார், கல்வி சாரா ஆளனியினர்களாலும் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, பழைய மாணவர் சங்கம் ஆகியோராலும் ஆற்றப்பட்ட கல்வி அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வும் மற்றும் அடுத்துவரும் ஆறு மாத காலப்பகுதியிலும் நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுமான செயற்றிட்டங்கள் தொடர்பான முன்னளிப்பும் இன்று (2022.05.31) முதல் எதிர்வரும் (2022.06.16) வரையும் எமது அலுவலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் இன்று தி/ இலந்தைக்குளம் வித்தியாலய, தி/ புனித லூர்த்து அன்னை ரோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் தி/ கருமலையூற்று வித்தியாலய அதிபர்களும் தத்தமது முன்னளிப்புக்களை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. சிவானந்தம் சிறீதரன் அவர்களதும் மற்றும் அலுவலக கல்வி அபிவிருத்திக் குழு முன்னிலையிலும் செய்திருந்தனர்.
குறித்த இந்த முன்னேற்ற மீளாய்வில் குறிக்கப்பட்ட (தை முதல் வைகாசி) காலப்பகுதியில் கல்வி அபிவிருத்தி அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான செயற்பாடுகள், மாணவர்களின் நலன்புரி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் ஆசிரிய ஆளணி அபிவிருத்தி தொடர்பான முன்னேற்ற நிலைமைகள், இவ்வாண்டில் செயற்படுத்த உத்தேசித்துள்ள முன்வேலைத்திட்டம் போன்றவைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டிருந்தமையும், இதன்வழி ஏனைய பாடசாலைகளினால் தொடர் காலங்களில் மேற்கொள்ளவிருக்கும் முன்னளிப்புக்களில் கவனத்தில் கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"පාසල් වැඩසටහන් පිළිබඳ ප්රගති සමාලෝචන ඉදිරිපත් කිරීම - 2022"
 
අපගේ අධ්යාපන කලාපය යටතේ ඇති (82) දෙමළ හා සිංහල භාෂා පාසල්වල මෙම වසරේ (2022) ජනවාරි සිට මැයි දක්වා සහ ඉදිරි හය සඳහා අධ්යයන, අනධ්යයන ආණ්ඩුකාරවරුන් සහ පාසල් සංවර්ධන විධායක කමිටුව, ආදි ශිෂ්ය සංගමය විසින් සිදු කරන ලද අධ්යාපන සංවර්ධන ව්යාපෘති සමාලෝචනය අද (2022.05.31) සිට මීළඟට (2022.06.16) අපගේ කාර්යාලයක් සැලසුම් කළ පරිදි T/ ilanthaikkulam විද්යාලය, T/Our Lady of Lourdes RCV සහ T/ Karumalaiutru විද්යාලය යන ශ්රවණාගාරයේ පැවැත්වීමට තීරණය කර ඇත. කලාප අධ්යාපන අධ්යක්ෂ මහතා සිවානන්දම් ශ්රීධරන් යන මහත්වරුන්ගේ ප්රධානත්වයෙන් සහ කාර්යාල අධ්යාපන සංවර්ධන කමිටුව හමුවේ.
මෙම ප්රගති සමාලෝචනයේ සඳහන් කාල සීමාව තුළ (ජනවාරි සිට අග දක්වා) අධ්යාපන සංවර්ධන නාමාවලියේ මට්ටම ඉහළ නැංවීමේ ක්රියාකාරකම්, ශිෂ්ය සුබසාධනය සම්බන්ධයෙන් ගෙන ඇති සුබසාධන යෝජනා ක්රම සහ ගුරු පුද්ගල සංවර්ධනයට අදාළ වැඩිදියුණු කිරීමේ තත්ත්වයන්, ක්රියාත්මක කිරීමට පෙර වැඩ සැලැස්ම. මෙම වසර සමාලෝචනය කර අනාගතයේදී අනෙකුත් පාසල් මගින් සිදු කරනු ඇත.
" Presentation Progress Review of Schools - 2022."
 
A Progress Review Presentation on Education Development projects carried out from January to May of this year and the projects to be implemented in next six months carried out by Academic, Non- Academic staff, SDECs and Old Students Associations of schools of Trincomalee zone are determined to be held from 31st of May to 06th of June.
Accordingly today, the Principals of T/Ilainthaikulam Vidyalayam, T/ Our Lady of Lourdes Roman Catholic School and T/Karumalaiutru Vidyalayam did their presentations on in the presence of Mr. Sivanantham Sritharan, the Zonal Director of Ecucation.
In this progress review, activities to raise the level of education, students’ welfare, teacher personnel development and workplans to be implemented this year had been reviewed.
It is also worth noting that this will be considered in the presentations to be made by other schools.

Print   Email