"மீலாது நபி தின விழாவும், அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும்-2022."

"மீலாதுன் நபி தின விழாவும், அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும்-2022."

எமது கல்வி வலயத்தின் கீழ் முஹம்மதியா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் M.A. ஸலாஹுதீன் அவர்களது தலைமையில் 2022 ஆம் வருடத்திற்கான மீலாதுன் நபி தின விழாவும், மாவட்ட மட்ட அஹதிய்யா பாடசாலைகளுக்கு இடையேயான கலாசாரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவித்து வெற்றிச் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இன்று (27.10.2022 ) குறித்த பாடசாலையில் இடம் பெற்றது.

மேற்படி நிகழ்விற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய. சிவானந்தம் சிறீதரன் அவர்கள் பிரதம அதிதியாகவும் மற்றும் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கௌரவ. A.P. முபாறக் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

குறித்த விழாவானது அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள், பெற்றோர் ஆகியோரின் ஒத்துழைப்புடனும் இவர்களின் உயரிய அர்ப்பணிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print   Email